பாங்காங்: தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்துக்கு புறப்பட்டு செல்கிறார். தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். அரசு மாளிகையில் ஷினவத்ராவை பிரதமர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இன்று மாலை தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்த பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடி இணைந்து கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ரா ஆகியோர் பிரபலமான வாட்போ கோயிலை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேபாள பிரதமர் சர்மா ஒலி மற்றும் வங்க தேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோரை நேரடியாக சந்திப்பார்.
The post பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்: பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.