ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க, பிரதமர் மோடி நாளை (ஏப். 6) ராமேஸ்வரம் வருகிறார். இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து, அவர் நாளை காலையில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப்பாலத்தின் மையப் பகுதிக்கு சென்று மேடையில் நின்றபடி புதிய ரயில் பாலத்தில், ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். செங்குத்து தூக்கு பாலத்தையும் திறந்து கப்பல் கடந்து செல்வதை பார்வையிட உள்ளார்.
அதன்பின் ராமநவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆலயம் விடுதி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்கிறார். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.
பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், தமிழ்நாடு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வருகை யொட்டி ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுளளது
The post பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை appeared first on Dinakaran.