நடிகர் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்' பட வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டைட்டில் தோற்றம் வெளியிடப்பட்டது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜ் கூறியுள்ளார்.