பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது:
2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது போன்றவற்றால் நிறுவனம், ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து மறுபணியமர்த்த உள்ளது. ஆனால், இந்த செயல்முறையின் விளைவாக வேலைவாய்ப்பில் ஒரு பகுதி அதாவது 12,200 வேலைகள் குறைக்கப்படும்.