சேலம்: சேலத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரன்-சீமான் சந்திப்பு படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சீமான் கேட்டுள்ளார். இவன், 15 ஆண்டாக எங்கு படுத்திருந்தான் எனவும் கேட்டிருக்கிறார். இருவரது சந்திப்பு படம், எடிட் செய்யப்பட்டது. அதுவே ஒரு ஆதாரமாகத்தான் எடுத்துக்காட்டுகிறோம். அதுக்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து எடுத்துக்காட்டுவது. ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? இந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்தான் என டெமோ காண்பிக்க சொல்கிறார். உலகம் முழுவதும் புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பதை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நண்பர் செங்கோட்டையனை இதுபற்றி ஏன் பேசவிடாமல் தடுத்துள்ளனர். அவருடன் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. அந்த ஆடியோ பதிவை வெளியிடட்டும். நான் என்ன பேசினேன் என்பது தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பிரபாகரனுடன் சீமான் இருப்பது எடிட் படம் ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? இயக்குநர் ராஜ்குமார் பதிலடி appeared first on Dinakaran.