பெய்ஜிங்: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக புதிய செய்தித் தொடர்பாளர் குவா ஜியாகுன், “யார்லுங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின் திட்ட விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. கடுமையான அறிவியல் மதிப்பீட்டுக்குப் பின்னரே இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல், புவியியல் நிலைமைகள் மற்றும் கீழ்நிலை நாடுகளின் நீர் வளங்கள் தொடர்பான உரிமைகள் மற்றும் நலன்களில் இந்தத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறேன். மாறாக, இது ஓரளவுக்கு, அவர்களின் பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்பு, காலநிலை எதிர்வினை ஆகியவற்றுக்கு உதவும்" என்று தெரிவித்தார்.