பீஜிங்: திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட நதிகளில் ஒன்று. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திரா தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.