புதுடெல்லி: பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளை முன்வைத்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படுவதாக நாங்கள் அறிந்தோம். அவற்றில், இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. புதிய மாகாணங்களை உருவாக்குவது நீண்ட காலமாக அந்தப் பகுதியில் இருந்து வரும் சீனாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாது” என்று தெரிவித்தார்.