இந்தியாவின் மிகப்பெரிய உணவுப் பொருள் விநியோகிக்கும் நிறுவனமான ஸ்விக்கி, தங்களிடம் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டில் அதிகபட்சமாக 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணியே முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நகரங்களின் வரிசையில் ஹைதராபாத் 97 லட்சம், பெங்களூரு 77 லட்சம், சென்னை 46 லட்சம் பிரியாணி உணவை ஆர்டர் செய்துள்ளன. பிரியாணிக்கு அடுத்தபடியாக தோசை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 23 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிற்றுண்டி வகையில் 24.8 லட்சம் சிக்கன் ரோல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக பிரியாணி உருவெடுத்துள்ளது.