பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில், ‘கரிம்போஸ்’ எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் இது பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கச் சுரங்கங்களை நோக்கி ஈர்த்துள்ளது. ஆனால், இதனால் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.