சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, அவரை இன்று (மார்ச் 18) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், என்று கூறப்பட்டுள்ளது.