புதுடெல்லி: "அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்" என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விமர்சித்தார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் பங்கேற்றுப் பேசினார். “அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவும், சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பதாகவும், இந்தியச் சமூகத்தை அவமதிப்பதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது.