சென்னை: பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து மே மாதம் 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதற்காக தமிழகம் புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுகள் அமைதியாக எந்த குளறுபடியும் இல்லாமல் நேற்றுடன் நடந்து முடிந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாக தேர்வு எழுதினர். இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (28ம் தேதி) 10ம் வகுப்பு தேர்வு தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வில் 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் மாணவியர், தனித் தேர்வர்கள் 25 ஆயிரத்து 888 பேர் பதிவு செய்துள்ளனர். சிறைவாசிகள் 272 பேர் பங்கேற்க உள்ளனர்.
The post பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவு 10ம் வகுப்பு தேர்வு 28ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.