சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, உஸ்மான் கவாஜாவின் விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய முன்னாள் வீரர் பிஷண் சிங் பேடியின் சாதனையை சமன் செய்துள்ளார். பேடி, 1977-78-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 31 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.