பாட்னா: தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிஹாரில் அடிக்கடி நிகழ்ந்து வந்த இந்து – முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறினார்.
பிஹார் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "2005-இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் – ஒழுங்கு நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. சூரியன் மறைந்துவிட்டால் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே மக்கள் அஞ்சினார்கள். சாலைகளும் மோசமாக இருந்ததால், பயணங்கள் மிகவும் கடினமாக இருந்தன" என்று கூறினார்.