பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சஞ்சய் சரோகி, சுனில் குமார், ஜிபேஷ் மிஸ்ரா, மோதிலால் பிரசாத், கிருஷ்ண குமார் மந்தூ, ராஜுகுமார் சிங், விஜய் குமார் மண்டல் ஆகிய 7 எம்எல்ஏக்கள் நேற்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.