
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. அதிகபட்சமாக சஹர்சா மாவட்டத்தில் 15.27% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று பிஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பெகுசராய் மாவட்டத்தில் 14.6% மற்றும் முசாபர்பூர் 14.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.

