புதுடெல்லி: பிஹாரில் முதல்வர் நிதிஷ் தலை மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. நிதிஷுக்கு பிஹார் முஸ்லிம் கள் கணிசமான எண்ணிக்கை யில் ஆதரவளித்தனர். ஆனால், வக்பு சட்டத் திருத்த மசோ தாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக் கிய ஜனதா தளம் கட்சி ஆதர வளித்ததால், தற்போது முஸ்லிம் கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இப்தார் விருந் தில் பங்கேற்க முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார். அதை புறக்கணித்து அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உட்பட பல்வேறு முஸ் லிம் அமைப்புகள் முதல்வர் நிதிஷுக்கு கடிதம் அனுப்பின.