பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னா புறநகரில் மினி வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
பாட்னா – நாலந்தா எல்லைக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் நேற்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயம் அடைந்த நால்வரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடுகின்றனர். விபத்து குறித்து முதல்வர் நிதிஷ் குமார் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.