போர்ட் ஆப் ஸ்பெயின்: டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத், பிஹார் மாநிலத்தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை முன்னிட்டு கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டுக்கு கடந்த 2,3-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்தார். கானா பயணத்தை முடித்துக் கொண்டு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி முதல்முறையாக சென்றுள்ளார். டிரினிடாட் பிரதமர் கம்லா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.