சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது.