நேதன் லயன் அவ்வளவு நல்ல ஸ்பின்னர் இல்லை என்று செடேஷ்வர் புஜாராவிடம் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கூறியதை அடுத்து, புஜாரா நேதன் லயனை இறங்கி வந்து சிக்ஸ் அடித்த சம்பவத்தை இப்போது ரோஹித் சர்மா நினைவுகூர்ந்து பேசினார்.
‘The Diary of a Cricketer’s Wife’ என்று புஜாரா மனைவி பூஜா எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரோஹித் சர்மா பேசினார். அப்போது அவர் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபி 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றபோது எப்படி புஜாரா தன் மெசேஜைக் கேட்டு நேதன் லயனை இறங்கி வந்து மிட் ஆனுக்கு மேல் தூக்கி அடித்தார் என்பதை விளக்கினார்.