சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள 4 “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்களை” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.3.2025) சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி.
மதுரை மாவட்டம் சோழவந்தான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி வீதம் மொத்தம் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4″முதலமைச்சர் சிறு விளையாட்டரங்களை” திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், 400 மீ நீள தடகள பாதை, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய ஹாக்கி மைதானம்.
2 கிரிக்கெட் பயிற்சி மைதானங்கள் அடங்கிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கான ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை’ திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 200 மீ தடகள் ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ கோ மைதானங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை. கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பாதை. பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (திருவைகுண்டம்). (சோழவந்தான்), எம்.சி.சண்முகையா எஸ்.மாங்குடி(காரைக்குடி), காரைக்குடி ஊர்வசி.செ.அமிர்தராஜ் (ஒட்டப்பிடாரம்), மாநகராட்சி மேயர் சோ.முத்துத்துரை, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி. இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆஷா அஜித், இ.ஆ.ப., (சிவகங்கை), க.இளம்பகவத், இ.ஆ.ப., (தூத்துக்குடி), மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப., (மதுரை). மண்டலக் குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
The post புதிதாக கட்டப்பட்டுள்ள 4 “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்களை” திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.