புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற என்னுடைய தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்தினேன்” என ஜோ பைடன் விளக்களித்திருக்கிறார்.
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டார். ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “கடவுள் அருளால் இந்த மனிதர் (புதின்) ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாது. நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயல்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக, உறுதுணையாக இருக்கிறோம்’ என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், அதன் பிறகு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அதற்கு விளக்கமளித்தார்.