சென்னை: மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட கதிர்வேடு மற்றும் கடப்பா சாலை ஆகிய மயானபூமிகளில் புதியதாக எரிவாயு தகனமேடை கட்டப்படவுள்ளதால், பொதுமக்கள் புழல் மற்றும் விநாயகபுரம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-31க்குட்பட்ட பாரதியார் தெரு, கதிர்வேடு மற்றும் வார்டு-32க்குட்பட்ட பாரத் நகர், கடப்பா சாலை ஆகிய இரண்டு மயான பூமிகளில் எரிவாயு தகனமேடை புதியதாக கட்டப்படுகிறது.
இதனால் 06.03.2025 முதல் 05.11.2025 வரை மேற்கண்ட மயானபூமியில் புதைத்தல் மற்றும் எரியூட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே, பாரதியார் தெரு, கதிர்வேடு மற்றும் பாரத் நகர், கடப்பா சாலை ஆகிய மயானபூமிகளில் எரிவாயு தகனமேடைகள் கட்டும் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் மாதவரம் மண்டலம், வார்டு-24க்குட்பட்ட புழல் மயான பூமி மற்றும் வார்டு-30க்குட்பட்ட விநாயகபுரம் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post புதியதாக எரிவாயு தகனமேடை: புழல் மற்றும் விநாயகபுரம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.