சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் எம்.ஏ.பேபிக்கு எனது வாழ்த்துகள். மாணவத் தலைவராக நெருக்கடி நிலையை எதிர்த்ததில் தொடங்கி, கேரளத்தின் கல்வி அமைச்சராக மாநிலக் கல்விப் பாதையை முற்போக்கு நோக்குடன் தீர்மானித்தது என அவரது அரசியல் பயணம் அவரது கொள்கையையும் உறுதியையும் காட்டுகிறது. மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சியில் ஆகியவற்றுக்கான நம் ஒன்றிணைந்த போராட்டத்தில் நம்மிடையே மேலும் வலுவான உறவினைத் திமுக சார்பில் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post புதிய மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.