புதுடெல்லி: ‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் உரையாற்றினார்.