புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்தில் வெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமவள கொள்ளைக்கான ஆதாரங்களுடன் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் அவர் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கனிமவள கொள்ளைகாக குரல் கொடுத்த குவாரி உரிமையாளரே திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த நிலையில் 5 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வட்டாட்சியர் மெத்தனமாக செயல்பட்டதாக வட்டாட்சியர் , கிராம நிர்வாகிகள், வருவாய் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். திருமயம் ஆய்வாளர் பணியிடை நீக்கல் செய்யப்பட்டார். கனிமவளங்கள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளது என கனிமவளத்துறை உதவி இயக்குனர் காத்திருப்பு பட்டியலுக்கு மற்றம் செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட ஜகபர் அலியின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி புதைக்கப்பட்ட ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதை தொடர்ந்து எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை எனவும் இதனை அரசியலாக வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜகபர் அலி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டு மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதிக்காத வகையில் 100 கிலோ மீட்டர் தூரம் பாரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு வட்டாட்சியர் ராமசாமி தலைமையில் போலீசார் உதவியுடன் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
The post புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி அதிகாரிகளின் முன்னிலையில் தொடக்கம்..!! appeared first on Dinakaran.