புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 220 வகை பறவை இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் வனத்துறை மூலம் ஈர நிலப்பரப்புகளிலும் மற்றும் நிர்பரப்புகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு புதுக்கோட்டை மாவட்ட வனசரகத்தில் நேற்று ஒரே நாளில் 25 ஈர நிலப்பரப்புகளில் உள்ள பறவைகள் வனத்துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் போது இனம், எண்ணிக்கை, அவைகள் எங்கிருந்து வருகிறது போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை வன சரகத்தில் கவிநாடு கண்மாய் ஆரியூர் கண்மாய், அன்னவாசல் பெரியகுளம், அருவாகுளம், அறந்தாங்கி வன சரகத்தில் காக்கத்திக்கோட்டை ஏரி, கீரனூர் கண்மாய், வெள்ளனுர் ஏரி, முத்துக்குடா கடலோரப் பகுதி, கட்டுமாவடி கடலோரப் பகுதி, பொன்னமராவதி வன சரகத்தில் கொன்னையூர் கண்மாய், ஏனாதி கண்மாய், காரையூர் கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், கருகப்பிள்ளம்பட்டி கண்மாய், திருமயம் வன சரகத்தில் பெல் ஏரி தாமரைக் கண்மாய், வேங்கை கன்மாய், வன்னி குளத்தான் கண்மாய், ஊனையூர் கண்மாய் ஆகிய 25 ஈர நிலப்பரப்புகளில் பள்ளி கல்லூரி, மாணவர்கள், பேராசிரியர்கள் தன்னார்வலர்கள் பறவை ஆர்வலர்கள் என சுமார் 120 நபர்களைக் கொண்டு 25 குழுக்களாக அமைக்கப்பட்டு இந்தப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கவிநாடு கண்மாயில் அழிவின் விளிம்பில் இருக்க கூடிய கூழைக்கடா, அருவாள் மூக்கான், கர்னூள், பாம்புதாரா, ஆளா போன்ற 44 வகை பறவைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 220 வகை பறவை இனங்கள் இருப்பதாக மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நிலப்பரப்புகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 16ம் தேதி வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
The post புதுக்கோட்டை வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு: 220 வகை பறவை இனங்கள் இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.