புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவாத காகிதப்பூ பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார் என்று அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார் .
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (புதன்கிழமை) 2025 – 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியது: “முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமானம் ஏதும் இல்லாமல், மத்திய அரசின் சிறப்பு நிதி ஏதும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலை முன்வைத்து அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள்.