புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகம். மத்திய அரசிடம் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்போம் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் பிற்பகலில் அக்குழுவினர் தங்குமிடத்துக்கு திரும்பினர். அங்குள்ள கருத்தரங்கு அறையில் வெள்ள சேதங்களை விளக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.