புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக சிறுமி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.