சென்னை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா 10 மின்வாரிய பிரிவு அலுவலகங்களை சீரமைத்து, புதுப்பொலிவுக்கு மாற்ற, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் மின்வாரியத்துக்கு 2,850 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் மின்கட்டண வசூல் மையங்களும், துணை மின்நிலையங்களும் உள்ளன. மின்விநியோக பணிகள் பிரிவு அலுவலகங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சேதம் அடைந்த மின்விநியோகப் பெட்டிகள், கேபிள்கள் உள்ளிட்ட மின்சாதனங்களும், வீடுகளில் இருந்து கழற்றப்படும் குறைபாடு உடைய மீட்டர்கள் உள்ளிட்டவையும் பிரிவு அலுவலகங்களில் குப்பைகள் போன்று குவித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.