சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அருண் தலைமையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல் ஆணையர் அருண் பேசியதாவது: