கத்தார்: ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.