சென்னை: “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் சனிக்கிழமை நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் உருவானதிலிருந்தே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடங்கி வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியிலும் இன்றும் கனமழை பெய்து வருகிறது.