நியூயார்க்: எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடர்ந்து மேம்பட்டுதான் வருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி மனிதர்களுக்கு தொற்றுவதை முன்கூட்டியே தடுப்பதில் அவ்வளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஹெச்ஐவி தொற்றிலிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் ‘லெனாசபவிர்’ என்ற மருந்துக்கு அமெரிக்க ஒழுங்காற்று அமைப்பு தற்போது அனுமதியளித்துள்ளது. ஹெச்ஐவி தொற்றை தடுப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை தினமும் உட்கொள்ள வேண்டும் என்பது போன்ற பிரச்னைகள் இருந்து வந்தன. தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் லெனாசபவிரை ஆண்டுக்கு 2 முறை செலுத்தினால் போதும். இந்த மருந்து ஒரு புரட்சிகரமான அறிமுகம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
The post புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி appeared first on Dinakaran.