யுவ்ராஜ் சிங் – இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக விளங்கியவர். ஒரு ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார். இன்று (டிசம்பர் 12) அவருடைய பிறந்த நாள். அதனால், பிபிசி தமிழ் சார்பாக அவரோடு விளையாடிய சக வீரர் ஒருவர், கிரிக்கெட் வல்லுநர் ஒருவர் என இருவரிடம் பேசினோம். “யுவ்ராஜ் சிங் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?” என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய நான்கு விஷயங்கள்…

