பெரம்பூர்: புளியந்தோப்பில் பூங்கா மற்றும் விளையாட்டு திடலில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு அம்பேத்கர் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்கா மற்றும் விளையாட்டு திடலில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் கட்டப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ரிப்பன் வெட்டி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து புளியந்தோப்பு நரசிம்மாநகர் பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சென்னை நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நரசிம்மாநகர் பகுதியில் 15 நாட்ளாக வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கூவம் ஆற்றின் கரையோரமும், ஆடுதொட்டி சந்தையிலும் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார். பொதுமக்கள் கொடுத்த மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
The post புளியந்தோப்பு விளையாட்டு திடலில் ரூ.40 லட்சத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.