சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
நடப்பு சீசனில் 18 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 10 ஐபிஎல் அணிகளும் குறைந்தது மூன்று ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் 6 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்.