ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் 'புவி நேரம்' நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்நாளில் ஒரு மணி நேரத்திற்கு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆதரவை உலக நாடுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக வனவிலங்கு நிதியம் (WWF) சிட்னி, அமைப்பு விளக்குகளை அணைத்து புவி நேரம் நிகழ்வை முதல் முதலாக தொடங்கியது.
இவ்வாறு சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய உலகளாவிய இயக்கமாக கருதப்படும் புவி நேரம் நிகழ்வின் 19வது பதிப்பானது, ஐ.நா. அவையின் உலக நீர் தினத்துடன் இணைந்து, இன்று (மார்ச் 22) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை கொண்டாடப்படுகிறது.