புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பின் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர் – காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.