நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் இன்று (டிசெம்பர் 5) ‘புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல இந்திய மொழிகளில் வெளியானது.இந்த படத்தின் முதல் பாகம் செம்மரம் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் விளைக்கின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் தமிழக மக்கள் ஆந்திராவிற்கு சென்று செம்மரங்களை வெட்டி அவற்றை கடத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.