அதிக வெப்பநிலையால் அதிகரிக்கும் பல நரம்பியல் நோய்களில் டிராவெட் சிண்டரோமும் ஒன்று என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்தவரும், மூளையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த துறையில் முன்னோடியாகவும் இருப்பவருமான சஞ்சய் சிசோடியா கூறுகிறார். புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றம் நமது மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?