புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அனுமதியை அடுத்து, பூஷன் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.4,025 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பூஷன் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்கள் ஆகியவை வங்கி கடன்களை பெற்று, அதை தனிப்பட்ட முதலீடுகளுக்கு பயன்படுத்தின. இதனால் அந்த நிறுவனங்கள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. பெருநிறுவனங்களின் திவால் சட்ட விதிமுறைகளின் கீழ் ஜேஎஸ்வி ஸ்டீல் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.