சேலம் சின்னக்கடை வீதியில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட்டை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மார்க்கெட்டை குத்தகைக்கு எடுப்பதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் ஆதரவாளர்களும் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களும் ஆளுக்கொரு பக்கம் படைதிரட்டினர். இறுதியில், அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவாளரான லோகேஷ் தரப்புக்கு பூ மார்க்கெட் டெண்டர் சிக்கியது.
இதையடுத்து, வீரபாண்டியார் ஆதரவாளரான பூக்கடை ராஜி தரப்பினர் அமைச்சர் நேருவை தனி ரூட்டில் சந்தித்துப் பேசி அவரது ஆசியுடன், மாநகராட்சிக்கு சொந்தமான விக்டோரியா வணிக வளாகத்தில் போட்டி பூ மார்க்கெட்டை கடந்த 9-ம் தேதி திறந்தனர். இதை வைத்தும் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.