சென்னை: பெங்களூருவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, அங்கு தரை இறங்க முடியாமல், மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. அதுபோல, பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய மேலும் சில விமானங்கள் திருவனந்தபுரம், கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மும்பையில் இருந்து புறப்பட்ட ப்ளூ டார்ட் சரக்கு விமானம் பெங்களூருக்கு சென்றது. ஆனால், பெங்களூரு விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் அந்த விமானம் பெங்களூருவில் தரை இறங்க முடியாமல் நேற்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரை இறங்கியது.
இததேபோல் புனே, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் இருந்து பெங்களூரு சென்ற பயணிகள் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கும், சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கோவை விமான நிலையத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
The post பெங்களூருவில் கடும் பனி மூட்டம் மும்பை சரக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.