பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்கை ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்கித் குமார் கூறும்போது, “பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளோம். பெரிய மருத்துவமனைகள் சிலவற்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டு மருந்துகளை ட்ரோன் மூலம் வேகமாக டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 கிலோ வரையிலான பொருட்களை ட்ரோன் மூலம் அனுப்பலாம். இதன் மூலம் பெங்களூரு வில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து. நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியும்” என்றார்.