புதுடெல்லி: ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான – ஏரோ இந்தியா 2025 – கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசியாவின் மிகப்பெரிய 15-வது விமானக் கண்காட்சியான – ஏரோ இந்தியா 2025 – கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும். 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்ற கருப்பொருளுடன், இந்த நிகழ்வு வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதுடன், உள்நாட்டுமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்தவும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் உதவும்.