புதுடெல்லி: பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகிய எரிபொருட்களை வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை என்றும் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் விநியோகச் சங்கிலிகள் சீராக இயங்குகின்றன. மேலும் எரிபொருள் மற்றும் எல்பிஜி அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன.